(Reading time: 18 - 35 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”ஏன் கேட்கறீங்க”

   

”இல்லை சேலையெல்லாம் கட்டியிருக்கியேன்னு கேட்டேன்”

   

”நீங்கதான் யூனிபார்ம் போட வேணாம்னு சொன்னீங்களே“

   

”அதுக்காக இப்படியா வரனும் எத்தனை ட்ரஸ் இருக்கு, பாவாடை தாவணி போடு இல்லையா ஜீன்ஸ் டாப்ஸ் லெக்கிங்கஸ் மிடி சுடி ஸ்கர்ட்னு வெரைட்டியா இருக்குல்ல அப்படி போட்டு அசத்தாம இப்படி வந்தா எப்படி ரோஜா”

   

”என்ன கிண்டலா நான் ஆபீசுக்கு வேலைக்கு வரேன், எங்க எந்த மாதிரி உடை உடுத்தனும்னு எனக்கு நல்லாவே தெரியும், நான் இப்படித்தான் வருவேன் இல்லைன்னா யூனிபார்ம்ல வரேன்“

   

”வேணாம்மா அந்த கொடுமைக்கு இது எவ்ளோ மேல் உனக்கென்ன உன் விருப்பப்படி எதுவேணும்னாலும் அணியலாம், பார்க்கறது நான்தானே என் கண்ணுக்கு குளிர்ச்சியா நீ வந்தா நான் சந்தோஷப்படுவேன்ல”

   

”ஷ்ஷ் யப்பா தாங்க முடியலை இதப்பாருங்க, ரூபாகிட்ட பேசி மயக்கற மாதிரி என்கிட்ட பேசி மயக்கலாம்னு நினைக்காதீங்க நான் ரோஜா, ரூபாயில்லை“

   

”அட என்னாச்சி எல்லாருக்கும், நானே ரூபாவை மறந்துட்டு ரோஜாவுக்கு வந்துட்டேன் ஆனா, மத்தவங்க இன்னும் ரூபாலயே இருந்தா எப்படி, இதப்பாரு ரோஜா நான் ரூபாவை காதலிச்சது உண்மைதான் ஆனா, எங்களுக்குள்ள ஒரு சின்ன ஈகோ அதனால நாங்களே சண்டை போட்டு பிரிஞ்சிட்டோம் தட்ஸ் ஆல்”

   

”ஓ அவள் திரும்பி வந்தா என்ன செய்வீங்க”

   

”கண்டிப்பா அவள் வரமாட்டா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.