(Reading time: 16 - 31 minutes)

03. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

ண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..

கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 

முந்தைய நாளின் உற்சாகத்தோடு வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள் மகி…அதற்கு இன்னொரு காரணம் இன்றிலிருந்து மகியும் மதிய நேர ஷிப்டிற்கு மாற்றப்பட்டிருந்தாள்..கேப்பிற்காக விடுதி வாயிலில் காத்திருந்தவள் முன் சுமோ வந்து நின்றது.வண்டி எண்ணை சரி பார்த்துவிட்டு முன் இருக்கைகள் நிறைந்து இருக்க பின் கதவை திறந்து ஏறினாள்..ஒரு ஆண் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க நிமிர்ந்து பார்க்காமலே மறுபுறம் சென்று அமர்ந்தாள்..சிறிது தூரம் சென்றிருக்க ஏனோ எதிரில் இருப்பவர் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு எழ நிமிர்ந்து பார்த்தவள் பேச்சிழந்து இருந்தாள்..ஏனெனில் எதிரில் இருந்தது சாட்சாத் நம்ம ராம் தான்..

என்ன ராம் நீங்க ஒரு வார்த்தை பேசிருக்கலாம்ல நா யாரோநு ரொம்ப அன்னிஸியா ஃபீல் பண்ணேன் என்றாள் புன்னகையோடு..

இல்ல…நீங்க என்ன பார்க்கவே இல்ல..சரி பப்ளிக்கா சீன் க்ரியேட் பண்ண வேண்டாமேநு தான் அமைதியா இருந்துடேன்..எப்படியும் கீழே இறங்கின அப்புறம் கண்டிப்பா பேசியிருப்பேன்..அப்புறம் புது ஷிப்ட் எப்படி இருக்கு?

ம்ம்ம்..மார்னிங் லேட்டா எழுந்தா போதும் சோ ஜாலியா தான் இருக்கு..

அது என்னவோ கரெக்ட் தான் நைட் எவ்ளோ நேரம் வேணா முழிச்சுருக்கலாம் ஆனா மார்னிங் சீக்கிரம் எழுந்துரிக்கிறது வாய்பே இல்ல..அண்ட் ப்ரம் டுடே கிறிஸ்துமஸ் செலப்ரேஷன்ஸ் லா ஸ்டார்டிங்..நீங்க எதுலயாவது பெர்ஃபாம் பண்றீங்களா மகி..

இன்னைக்கு தான் அதபத்தி டிஸ்கஷன் இருக்குநு அகல்யா கூப்டிருந்தாங்க..போனா தான் தெரியும்..

இவ்வாறாக ஆபீஸை வந்து அடைந்து தத்தம் வேலைகளில் மூழ்கிப் போயினர்..கிறிஸ்துமஸ் விழாவிற்கான டிஸ்கஷனில் மகியை ஏஞ்சலாக வேடமிடக் கூறினர்..மகி எவ்வளவோ மறுத்தும் அவள்தான் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர்..மகிக்கு இதில் துளியும் விருப்பமில்லை…என்னதான் அவள் நடனத்திற்காக பல மேடைகள் ஏறியிருந்தாலும் இன்று அவளுக்கு இதில் இஷ்டமில்லை..தன் தோழி கல்யாணி கூறியது நினைவிற்கு வந்தது,அங்க போயும் ஆட கூப்டாங்க பாட கூப்டாங்கநு ஓடிறாத,.நீ வேற கண்ண உருட்டி உருட்டி எக்ஸ்பெரஷன் குடுப்ப..சென்னை பசங்கலா அப்புறம் அங்கயே அவுட்,கேர்புலா உன் வேலைய மட்டும் பாரு..

ஆனால் எவ்வளவு கூறியும் அவளை விடுவதாய் இல்லை..வேண்டா வெறுப்பாய் தன் இடத்தில் இருந்தவளிடம் வந்தாள் திவ்யா,

டா என்னாச்சு ஏன் ஒருமாறி இருக்க – திவ்யா..

நடந்தவற்றை கூறியவள் குறைப்பட்டு கொண்டாள் ஏன் தான் இப்படி படுத்துறாங்களோ வரலநு சொன்னா விட வேண்டியது தான உயிர வாங்குறாங்க திவி..

சரி விடு மகி இவங்க எப்பவுமே இப்படிதான்..கொஞ்ச நேரம் தான சமாளிச்சுரலாம்

ம்ம்ம்ம் வேற வழி..ஆமா நீ என்ன விஷயமா வந்த சொல்லு?

ஆங்ங் மறந்தே போய்ட்டேன் பாரு இன்னைக்கு டின்னர் எங்க பேட்ச் மேட் ட்ரீட் தர்றான் அதான் நீ டின்னர் தனியா போய்டுவியா இல்ல நா வேணா உன் ககூட வரவாநு கேக்க வந்தேன்..

ஓ,.ஐ வில் மேனேஜ் மா..நீ போய்ட்டு வா,..

திவ்யா கிளம்பியவுடன் ஐயோ இது வேறயா இன்னைக்கு யார் முகத்துல முழிச்சனோ தெரியலயே…9 மணிக்கு கேன்டீனே காலியா இருக்கும் என்ன பண்றது..சிறிது நேரம் யோசனையில் இருந்தவள் முடிவுக்கு வந்தவளாய் கணிணியில் பரணியின் சாட் பாக்ஸை ஓபன் செய்தாள்..

ஹாய் அண்ணா..

சொல்லுடா குட்டி பொண்ணு..அதிசயமா சாட்லா பண்ற..

அண்ணா ஒரு சின்ன ஹெல்ப்..

என்னடா சொல்லு..

இல்ல என் ப்ரெண்ட்ஸ்லா ட்ரீட் போறாங்க டின்னர் தனியா போக ஒரு மாறி இருக்கு அதான் உங்க கூட வரலாமாநு…

ஹே இதுல என்னடா இருக்கு யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்…ஒன் மினிட் இரு..

சாட்டில் ராமை இணைத்தான் பரணி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.