(Reading time: 5 - 9 minutes)

எங்கே செல்லும் இந்த பாதை??? - ரகசிய ஜனனி

Dark

ருள்… அந்த இடமே இருள் சூழ்ந்திருந்த்து…

ஆனால் இருள் பழக்கப்பட்ட அந்த கண்களுக்கு அது ஒன்றும் பெரியதாய் தெரியவில்லை.

எங்கே செல்லும் இந்த பாதை என தெரியாமல் புதிய பாதையில் ஒரு பயணம்.

வாழ்க்கையே வெறுத்துவிட்டிருந்த்தது.

என்ன வாழ்க்கை இது… தாயும் இருந்து… தந்தையும் இருந்து அத்தனை உடன்பிறப்புகள் இருந்து… இப்படி தனியாய் இருக்க… வாழ்க்கையே வெறுத்துவிட்டிருந்த்தது.

நண்பர்கள்… ம்ம்ம்… எத்தனை பேர் இருந்தும் என்ன… அவரவருக்கு அவரவர் பாதை…

கைகளில் பொருள் இருந்தால் தேடி வருவார்கள்… இல்லையென்றால் இருக்கும் இடம் தெரியாது மறைந்து போவார்கள்.

இப்படியாய் சில நிமிடங்கள் கரைந்தது…

அந்த பாதை… அது அப்படி ஒன்றும் கரடுமுரடானதாய் இருக்கவில்லை.

ஆனால் அந்த குறுகிய பாதையில் நடப்பதற்கே சற்று சிரமமாய் இருந்தது.

அது அல்லாமல் அதன் இரண்டு பக்கமும் உயரம்உயரமாய் இருந்தது வேறு பயமுறுத்தியது.

கவனம் தேவை… ஏனென்றால் எப்போ எப்படி எங்கிருந்து ஆபத்து வரும் என தெரியாது. சிறிது தடுமாறினாலும் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டியதாகிவிடும்…

எனவே கவனம் தேவை…

கண்களை நன்றாக தீட்டிக் கொண்டு செல்லுதல் மிக அவசியம் இந்த பயணத்தில்.

பசி வயிற்றை கிள்ளியது.

சாப்பிட என்ன கிடைக்கும்.

இப்போது தேடலுடன் கூடிய பயணம் தொடர்ந்தது.

ஆஹா… எங்கிருந்தோ ஒரு நல்ல மனம்.

தேடலுக்கான வெற்றி கிடைத்துவிட்டது.

அங்கே கிடைத்தது சாப்பாடு.

அருமையான சாப்பாடு.

வயிறு முட்ட சாப்பிட்டவுடன் களைப்பு.

நெடுநேர பயணம்… நீண்டநேர பசி… இவற்றினால் ஏற்பட்ட களைப்பு.

விளைவு தூக்கம்.

நல்ல வசதியான இடமாய் பார்த்து நிம்மதி தூக்கம்.

க்ரீரீரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்…….

படாரென கேட்ட சத்தத்தில் பட்டென விழிப்பு.

மெல்லிய வெளிச்சம்.

இதையடுத்து அந்த இடத்தில் பயங்கரமான சில அதிர்வுகள்.

அந்த பாதையில் இருபுறமும் உயரம் உயரமாய் இருந்தவையெல்லாம் அசைந்தது.

விட்டால் மேலேயே விழுந்துவிடுவதுப் போல் அசைந்தது.

பின் அமைதி.

ஆனால் நெடுநேரம் நீடிதிருக்கவில்லை.

யாருடையதோ… அலறல் குரல்…

பயம்… பயம் வந்து முகத்தில் அப்பிக் கொண்டது.

தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்த வழியே பின்னோக்கி ஓட்டம்.

ஆச்சி… இவனுக்கு தெரியாம் நான் ஒளிச்சி வச்சிருந்த கேக்க காணோம்…

நல்லா பாருடி… அங்கதான் இருக்கும்…

இல்லை ஆச்சி… நல்லா பாத்துட்டேன்… இங்க பாரு காணோம்… இவன் என்னோடத எடுத்து சாப்பிட்டறான்னுதான் நான் இங்க என் கப்போர்ட்ல வச்சிட்டு போயிருந்தேன்… வந்து சாப்பிட்டுகலாம்னு… என்று தேம்பினாள்.

ஏன்டா… எடுத்தியா…

ஐய்யோ ஆச்சி… நிஜமா நான் எடுக்கலை… எனக்கு எதும் தெரியாது… இவ பொய் சொல்லுறா…

நான்லாம் பொய் சொல்லல… அவள் அழுதாள்.

சரிடா… அவன் உன் அண்ணன்தான… சாப்பிட்டா சாப்பிட்டுக்கிட்டும்… விடு…

அதெல்லாம் முடியாது… அவள் அழுக,

டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.