(Reading time: 5 - 9 minutes)

ராணி - சத்யா

ன் வாழ்கையில் என்ன ஆக வேண்டும் என்ற சிந்தனை ஓய்வதற்குள், என் பட்டப் படிப்பு முடிந்து வீட்டில் இருந்து நாடு கடத்தப் பட்டு, கணினிகளையும் அதே போல் பல நேரங்களில் நடந்து கொள்ளும் மனிதர்களையும் வைத்து பணம் செய்யும் ஓரு நிறுவனத்தில் நான் சேர்ந்து சில மாதங்கள் கடந்தன. புதிய நண்பர்கள் பலர் சேர வாரத்தில் ஐந்து நாட்கள் கஷ்டப் பட்டு மீதம் உள்ள இரண்டு நாட்களில் ஆனந்தம் தேடி அலையும் பலரில் நானும் ஒருவனாக இல்லாமல் என் தனி அறையில் உறங்கிக் கிடக்க……..

என் 'தொல்லைபேசி' ஒலித்தது. ராணியின் அழைப்பு அது . அவர் பெயர் அது அல்ல. ஆனால் எனக்கு அவர்களை வேறு பெயர் சொல்லி அழைக்க மனம் இல்லை. அழகிலும் குணத்திலும் ஆழுமையிலும் அவள் ராணி. அந்த எந்திரபுரியில் வெகு விரைவில் நல்ல உயரத்தில் இருந்த ராணியின் அழைப்பை என்னால் மறுக்க முடியாமல் சரி என்று சொல்லி கிளம்பத் தொடங்கினேன். உதிரும் முடியை எண்ணி வருந்திக்கொண்டு ஆங்கிலத்தின் உடைகளை அணிந்து கொண்டு அவர் சொன்ன இடத்தில் காத்திருக்க,.. என் முன் வேகமாக ஒரு நான்கு சக்கரங்கள் பொருந்திய ரதம் வந்து நின்றது.

ஏன் என்னை அழைத்தார் என்பது அப்போது எனக்கு புரிந்தது. ராணியின் பின் சுற்றி திரியும் ராம் அவர்களுடன் இருந்தான். அந்த ஓநாயிடம் இருந்து தப்பிக்க என்னை அழைத்திருக்கிறார். அவன் ராணி வீட்டில் அவனிற்கு பார்த்திருக்கும் மாப்பிளை. ராணிக்கு இஷ்டம் இல்லை. பேசி பார்க்க சொல்லி இருந்த தந்தையின் ஆணையை ஏற்று இந்த முடிவு போல என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.அவன் எதோ அரசு துறையில் பெரிய வேலையில் இருக்கிறான் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ராணி ," ஒய் சத்யா 'வீக்கெண்ட்' கூட ரூம்ல படுத்து தூங்கணுமா உனக்கு.. கால் பண்ண அவ்ளோ யோசிக்கிற .. ஒழுங்கா இந்த ராணி சொல்ற இடத்துக்கு வர.... ".

ராம் , "என்ன ராணியா??..". ராணி,” ஆமா ராம் என்ன இவன் எப்பவும் அப்படி தான் சொல்லுவான் ...”

ராம் என்னை பார்த்து முறைக்க நான் பின் பறம் ஏற ராணியும் என்னுடன் வந்து பின் புறம் அமர அவன் முகம் சிவந்து ரதத்தை வேகமா செலுத்தினான்.

ரதம் கட்டிடங்களும் மாசுவும் நிறைந்த ஊரை விட்டு கடந்து ஒரு மாசற்ற ஓரு கடல் பக்கத்தில் இருக்கும் இன்பச்சுற்றுலா தளத்திற்கு வந்தடைந்தது.

ராணியின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பதை போல அங்கு பெரிய கூட்டம் கடல் பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தது.

அங்கு எதோ நடந்திருக்கிறது. அதை வேடிக்கை பார்க்க அவ்வளவு மனிதர்கள்.

என்னவென்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

கடலில் எதோ நிகழ்ந்திருகிறது.

என் மனதில் எதோ தடுமாற்றம்.

என் கண்களில் தானாக கண்ணீர் வர ஆரம்பித்தது. எதற்கென்று எனக்கு புரியவில்லை.

நான் ரதத்தின் கண்ணாடிகளை இறக்கி பார்க்க அதற்குள் ராணி தன் சொந்த வீட்டிற்கு வந்தது போல் ரதத்தை விட்டு வேகமா இறங்கி அந்த கூட்டதினுள் மறைய ராமும் அவரை பின் தொடர்ந்து சென்றான்.

நான் இதற்கு முன்பு ராணியுடன் அங்கு வந்தது போல் எனக்கு எதோ சிந்தனை. நான் மெல்ல நடந்து ராணியை தேடினேன்.

சில காவலர்கள் மக்களை கடலிடம் செல்ல விடாது ரதத்தில் அங்கும் இங்கும் சென்று தடுத்துக் கொண்டிருந்தனர்.

என்ன வென்று பார்த்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது.

அங்கு மீனவர்கள் கடலுக்கு எடுத்து போகும் கப்பல் போல் பல பழங்காலத்து கப்பல் பல இருந்தன. அதன் மேல் சில ஆயுதங்களும் ராஜா காலத்து உடைகளும் நகைகளும் இருந்தது.கொம்பு சீவ பட்ட சில காளை மாடுகள் அந்த கப்பல் பக்கத்தில் எவரையும் போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

அதன் கண்கள் சிவந்து இருந்தன.

மக்களுள் சிலர் "இவ்ளோ மாடு 100 கிட்ட இருக்கும் எப்படி இந்த இடத்துக்கு வந்துது... 1000 கோடி இருக்கு மா பா அந்த நக லாம். " கடல் பக்கத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு சில தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவர்கள் எதோ செய்து கொண்டிருந்தனர்.

துப்பாக்கி ஏந்திய சிலர் அங்கும் இங்கும் அலைந்தனர். அலைகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

ன் மனம் எதோ பட படத்தது. ராணி எப்பொழுதும் என்னை பார்த்து சொல்வது ஞாபகம் வந்தது.

தலையை சாய்த்தபடி என் முகத்தை பார்த்து "டேய் சத்யா இதுக்கு முன்னாடி உன்ன எங்கயோ பார்த்துருக்கேன்...". நான் எப்பொழுதும் "இருக்கும் இருக்கும்" என்று பதில் சொல்வது. ராமின் குரல் கேட்டு என் சிந்தனையை கலைத்தது. என் கைகளின் நடுக்கம் மறையவில்லை.

ராணி எங்கே என்ற ராமின் கேள்விக்கு பதில் கூட சொல்லாமல் அங்கு மணலிலே நான் மயக்கம் வருவது போல் கீழே விழ .ராம் என்னை பிடிக்க ..

ராணி என் கண்களுக்கு தெரிந்தால். அவள் அங்கிருந்த ஒரு கப்பலில் இருந்த உடைகளை எடுத்துப் பார்க்க தன் ஆங்கிலத்தின் உடையின் மேல் அதை அணிந்து கொண்டால்.

அவள் கண்களிலும் கண்ணீர் வருவது எனக்குத் தெரிந்தது.

அந்த கொம்பு சீவ பட்ட மாடுகளை அடக்க அதை வளர்த்த உரிமை யாளர்களை தேடி அழைத்து வந்திருந்தனர். அவர்களாலும் அதை கட்டு படுத்த முடியவில்லை.

ராணியை மட்டும் அவைகள் எப்படி உள்ளே அனுமதித்தது என்று மக்கள் அனைவரும் குழம்பிப்போய் இருந்தனர்.

மாடுகளுக்கு மயக்க மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டு இருந்தது.

ராணி அந்த களைகளின் மையத்துக்கு வந்து ஓரு காளையின் கழுத்தை கட்டி அனைத்துக் கொண்டு எதோ சொல்ல.

அனைத்தும் அமைதியாக நின்றது.

அவள் காவலர்களை பார்த்து இப்போது வாருங்கள் என்று சொல்ல அனைவரும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.

அவர்கள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு என்னை பார்த்து “நீ வா சத்யதேவா” என்று சொல்ல. நான் எழுந்து நடக்க. அவைகள் எனக்கு வழி விட்டு நகர்ந்தது. என் கண்களில் வழிந்த நீரை ராணி துடைத்தல். என் நெற்றியில் ஓரு முத்தம் இட்டால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.