(Reading time: 21 - 41 minutes)

அன்பெனும் கோவில் ஏற்றிய தீபம்  - புவனேஸ்வரி கலைச்செல்வி

This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

வ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

Anbenum kovil etriya deepam

பின்னணி பாடகி சித்ரா அவர்களின் குரலில் ஒலித்தது மயூரியின் கைப்பேசி. அதுதான் அவளின் அலராம் .. தொலைந்து போன நம்பிக்கையை இந்த பாடலின் மூலம் தினமும்  பெற்று கொள்வதே அவளின் வாடிக்கை .. கண்களை மூடிக்கொண்டே எழுந்தவள், தன் உள்ளங்கைகளை கண்முன்னே நிறுத்தி மெல்ல கண்விழித்தாள் .. அது அவளது கணவன் கற்று தந்த பழக்கம் .. திருமணம் ஆன புதிதில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்புவரை அவளின் விடியலே தனி அழகாய் இருக்கும் .. அவளின் ஆசை கணவன் பின்னாலிருந்து அவளை அணைத்து  தன் கரத்தோடு அவள் கரத்தையும் இணைத்து இருவரும் ஒன்றாய்தான்  கண் விழிப்பார்கள் .. அதை நினைத்து சோகமாய் புன்னகைத்தவள் அவனது அறையை எட்டி பார்த்தாள் ..

" என்ன இன்னும் கதவு திறக்கல ?? இன்னும் எழவில்லையா ? இன்னைக்கு மீட்டிங் இருக்குனு சொன்னானே  " என்று யோசித்து கொண்டே எழுந்தாள் ... " நாம போயி எழுப்புனா கோபப்படுவானோ ?? ஆனா மீட்டிங் அதைவிட முக்கியம் ஆச்சே ?.. போன் பண்ணி பார்க்கலாமா ? ..ஒரே வீட்டில் இருந்துகொண்டு போனா ? அதுக்கும் கோபப்படுவான் .. என் மூஞ்சிய பார்த்து பேச கூட உனக்கு கஷ்டமா இருக்கான்னு கேட்பானே .. எவ்வளவு இனிமையானவன் என் விஷ்வா ... நான்தான் அவனை இப்படி மாத்திட்டேன் ... ஆனா கல்யாண வாழ்க்கையில் மன்னிப்பு இருக்க கூடாதா ?விளையாட்டிற்கு நான் சொன்னது வினையாகி விட்டதே ..என்னை அவன் மன்னிக்கவே போவதில்லையா ? என்னால் அவன் இல்லாமல் இருக்க முடியலைன்னு அவனுக்கு புரியலையா ?? " தன்னிரக்கத்தில் கண்ணீர் சிந்தினாள்  மயூரி . இன்னொருபுறம் அவளின் மூளையோ நேரத்தை விரயமாக்காதே என்று அறிவுறுத்தியது .. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் இதென்ன புதுசா ?? என்று எண்ணி பெருமூச்சுவிட்டவள் அவன் அறைக்குள்  சென்றாள் .. மூன்று மாதங்களுக்கு முன்னால் அது அவர்களின் அறையாகத்தான் இருந்தது .. ! அறையில் அவளை வா என்று வரவேற்றது அந்த மது பாட்டில்கள் ... வர வர அவனின் மது பழக்கம் ஜாஸ்தியாகி கொண்டே போகிறதே .. அப்படி என்ன செய்துவிட்டேன்னு இப்படி பண்ணுறான் இவன் ? கொஞ்சம் கோபமும் வந்தது .. அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள்  அவனை எழுப்ப அருகில் வந்தாள் ..

விஷ்வா...29 வயது வாலிபன்.. வட்ட முகம், சுருள் கேசம், ஆறடி உயரம், கட்டு மஸ்தான தேகம்.. அவன் கொஞ்சம் சிரித்தாலே பார்ப்பவர் உள்ளம் தடுமாரிவிடும் அப்படி ஒரு ஆணழகன். அன்பே உருவானவன்.. உழைப்பால் உயர்ந்தவன்...இயற்கையை நேசிப்பவன் .. இளம் தொழிலதிபர்களில் ஒருவன்.  முடிவெடுப்பதில் மட்டும் மின்னலை விட அதிவேகமானவன் ..அவர்களின் திருமணம் கூட அப்படித்தான் நடந்தது ... வாங்க அவங்களுக்கு எப்படி திருமணம் ஆனதுன்னு பார்ப்போம்..

ன்றொரு நாள், ஒரு முக்கியமான வியாபார ஒப்பந்தந்திற்கு கையொப்பம் இட்டுவிட்டு அதே சந்தோஷத்தோடு கடற்கரைக்கு வந்திருந்தான் விஷ்வா .. கடல் அலைகள் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்ட அவன் பாதங்களை உரசி செல்ல, கடற்கரை காற்றோ அவனின் சுருள் கேசங்களை கலைத்து விளையாடி கொண்டு இருந்தது. தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் ஒரு பார்வையாளனாய் பார்த்துக் கொண்டே நடைபோட்டான் .. அதே கடற்கரையில் ஒரு படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்  மயூரி .. ஆண்களில் இவன் பேரழகன் என்றால்  பெண்களில் இவள் அப்சரஸ் தான் .. பார்த்தவுடனே ஈர்த்துவிடும் அழகுதான் அவளுக்கு ..  அவளருகில் ஒரு பேக்  இருந்தது .. அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட பார்க்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள்  அவள் .. அப்படி என்னதான் சோகம் இவளுக்கு ?? கடல் தேவதை கண்களில் அடை மழை போல இருந்தது அந்த காட்சி... தூரத்தில் இருந்தே அவளை பார்த்துவிட்டான் விஷ்வா .. " யாரிவள் ?? தனியாக இப்படி அமர்ந்து கொண்டிருக்கிறாள் ? யாராவது ஏமாற்றி விட்டார்களோ ? " அவளை பார்த்து கொண்டே மெல்ல நடந்தான் அவன் ..

கண்ணிமைக்கும் நேரத்தில் கடலை நோக்கி ஓடினாள்  பெண்ணவள்.

" ஏய் ... நில்லு " என்று கத்திக் கொண்டே அவளை துரத்தினான் விஷ்வா ..

" என்னை விடு .. நான் சாகனும் "

" ஹே பைத்தியமா  நீ ... இந்த பக்கம் வா .. வான்னு சொல்றேன்ல .. "

" என்னை தொடாதே  நான் சாகனும் "

" முட்டாள் மாதிரி பேசாத ..."

" ஆமா நான் முட்டாள்தான் .. முட்டாள்களுக்கு இந்த உலகத்தில் இடமில்லை .. என்னைவிடு "

" நீ சாக கூடாது "

" அதை சொல்ல நீ யார் ?? என்னை விடு " என்று கத்தி, தன்னால் இயன்ற அளவு அவனை பிடித்து தள்ளிவிட்டு முன்னேறினாள்  மயூரி. கொஞ்சம் தடுமாறி எழுந்தவன், அவளருகில் வந்து எதுவும் பேசமால் " பளார் " என்று ஒரு அறைவிட்டான். அவன் ஒரு அறையிலேயே மயங்கி சரிந்தாள்  மயூரி .

ண்விழித்து பார்க்கும்போது அவனது வீட்டில் இருந்தாள்  அவள் .. அதுவரை அவளருகில் நிம்மதி இல்லாமல் அமர்ந்தவன் அவளை பார்த்ததும் உயிர் .பெற்றான் .

" நான் எங்க இருக்கேன் ?"

" என் வீட்டுலதான் "

" நீ .. நீ யாரு ??"

" நான் விஷ்வா .. பயப்பட வேணாம் .. ஒரு பெண்ணிடம் தனது பலத்தை காட்டும் அளவுக்கு கொடூரமானவன் இல்லை .. " அதற்குள் நடந்தது எல்லாம் நினைவில் வர

" ஆனா ஒரு பெண்ணை அறையுற  அளவுக்கு நல்லவன் நீ .. அப்படிதானே ? " என்றாள்  கோபமாய் ..

" நான் அறையலைனா நீ இன்னைக்கு கண்டிப்பா கடலில் விழுந்து இருப்ப "

" ஆமா அதில் என்ன சந்தேகம் ? என்னை காப்பாற்றி விட்டதா இறுமாப்பு கொள்ள வேணாம் .. உன் வீட்டுலையே எனக்கு சாக தெரியும் " என்றாள்  ..

அவளின் முகத்தை பார்க்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது .. எப்படியும் தன்னை விட 5-6 வயது இளையவளாக இருப்பாள் இவள் .. ஆனால்  வயதிற்கு மீறிய துயரம் ... அதைவிட குழந்தைதனம் மாறாத முகம் ... இவளை எப்படி சாக விடுவேன் நான் .. ? என்று தன்னைதானே கேட்டான் ..

" உனக்கு என்ன பிரச்சனை?? "

" ...."

" யாரு நீ ? உன் வீடு எங்க இருக்கு ? அப்பா அம்மாலாம் தேட மாட்டாங்களா ?? "

அவ்வளவுதான் வெடித்து அழ தொடங்கினாள்  மயூரி .. அவளின் கண்ணீரை பார்க்க பொறுக்காமல் அவள் அருகில் உட்கார்ந்து பேசினான் விஷ்வா ..

" என்னமா ??? ஏன் அழற? ப்ளீஸ் அழாதடா " என்றான் .. அவனது தோளில்  சாய்ந்து கொண்டு சிறுபிள்ளை போல கேவினாள் மயூரி ..

" எனக்குன்னு யாரும் இல்லை விஷ்வா .. அப்பா நான் பிறந்தபோதே உயிரோடு இல்லை .. இப்போ அம்மாவும் போயிட்டாங்க .. எனக்குன்னு இப்போ யாருமே இல்லை .. நான் ஏன் உயிரோடு இருக்கணும் .. நான் யாருக்காக வாழனும் ? நான் செத்து போயிடுறேன் விஷ்வா .. கடவுள் நான் சாகனும்னு சொல்லித்தான் என்னை தனியா விட்டுடாரு " என்று அழுதாள் .. அவளை தோளோடு அணைத்து  கொண்டான் விஷ்வா .. அவள் , யார் ? அவள் பின்னணி என்ன ? தன் குணத்திற்கு தகுந்தவளா என்று யோசிக்க அவன் மனம் இடம் தரவில்லை .. மின்னல் வேகத்தில் முடிவெடுத்தான் ..

" நான் இருக்கேன் டா ... எனக்கும் யாருமில்லை .. ஒரே ஒரு தம்பிதான் மலேசியாவில் இருக்கான் ..நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .. நீ எனக்காக வாழனும் "

பெண்ணல்லவா அவள் ? இயல்பிலே எழுந்த ஜாக்கிரதை உணர்வு அவளை சம்மதிக்க வைக்கவில்லை . எனினும் அவன் வீட்டிலேயே தங்கி  கொள்ள சம்மதித்தாள் . சில மாதங்களிலே அவன்பால் கவரப்பட்டாள் .. அவனது தம்பி விஷ்ணுவிடமும் அவ்வபோது போனில் பேசி நல்ல தோழியும் ஆனால் .. காலச்சக்கரம் சுழன்ற வேகத்திற்கு ஏற்ப அவள் வாழ்வும் மாறியது .. செல்வி. மயூரி , திருமதி மயூரி விஷ்வாவாக மாறியும் போனாள். இப்போ நிகழ்காலத்தை பார்ப்போம் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.