(Reading time: 3 - 6 minutes)

திருமணத்திற்கு பின் காதல் – அஜிதா

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

வறு செய்து விட்டு தந்தைக்கு பயந்து தாயின் பின்னால் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் மழலையை போல் அந்த அதிகாலை பொழுதின் அழகிய வானில் வரலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொண்டு இருந்தான் சூரியன். அருகில் இருக்கும் ஓடையில் சலசலக்கும் நீரின் ஒலியும் தேன் எடுக்க மலரை மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரமும் செவியில் கேட்க, கொட்டி கிடக்கும் இயற்கையின் அழகை ரசித்த படி அமர்ந்திருந்தார் செல்வம்.

தலைகுளித்து நுனியில் முடித்து கொஞ்சமாய் முல்லை சரத்தை தலையில் சூடி நீல நிற சேலையில் அழகாய் குனிந்து கோலம் போட்டு கொண்டிருந்தாள் அஜிதா. தற்செயலாய் திரும்பிய செல்வம் தன் மனைவியின் அழகை கண்டு பிரமித்துதான் போனார்.உடனே மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்து ,

" அஜிமா, இயற்கைய அழகுன்னு நெனச்சு ரசிச்ச எனக்கு இப்போ என் பொண்டாட்டி தா எல்லாத்தையும் விட அழகுன்னு இப்படி ஈஸியா புரிய வச்சுட்டியே எப்புடி? ன்னு கேட்க. நிமிர்ந்து பார்த்த அஜிதா வெட்கத்தோடு

Thirumanathirku pin kathal

என்னங்க நீங்க காலைலயே ஆரம்பிச்சாச்ச . சரியான பொண்டாட்டி தாசன். போங்க போய் பேப்பர் படிக்கச் உக்காருங்க. நா உங்களுக்கு சூடா காபி எடுத்துட்டு வர என்று தன் கணவனின் தாடையை செல்லமாய் ஆட்டியபடி கூறி சென்ற தன் ஆசை மனைவியை வாஞ்சையோடு பார்த்தார் செல்வம்.

பேப்பர் படித்து கொண்டு இருந்த செல்வத்தின் முன் காபி டம்ளரை நீட்டினாள் அஜிதா.

இப்போ காபி கொடுகிரியா இல்ல உன்னோட அழகான கைகள முத்தமிட காட்றியா என்று கேட்ட கணவரிடம் செல்லமாய் முறைத்து விட்டு காபி டம்ளரை கையில் திணித்து விட்டு அடுகலைக்குள் சென்றார் அறுபது வயது அஜிதா.

காதல் என்பது வெறும் கவர்ச்சி மட்டும் அல்ல அது தான் ஒருவரின் பலம் பலவீனத்தை தீர்மானிப்பது. தள்ளாத வயதிலும் கணவனும் மனைவியும் இவ்வளவு அழகாய் திருமணத்திற்கு பின் இத்தனை வருடமாய் காதலர்களாய் வாழ்கிறார்கள். இருபதில் வரும் வெட்கத்தை விட அறுபதில் வரும் வெட்கம் எவ்வளவு அழகாய் உள்ளது. அறுபது வயது அஜிதா பாட்டியின் வெட்கமும் செல்வம் தாத்தாவின் குறும்பு காதலும் எவ்வளவு அழகு. தான் காதலித்து கரம் பிடித்த கணவனிடம் சண்டை போட்டு கோபித்து கொண்டு தன் தோழியின் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கும் வெண்பா விற்கு அப்போது தான் மண்டையில் உரைத்தது

உடனே மொபைல் மூலம் கணவனிடம் பேசினாள் . அவனும் அவள் அலைபிற்காக காத்திருந்தவன் போல் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து இதோ தன் வீட்டிற்கும் கூட்டி சென்று விட்டான் . இதை எல்லாம் அறியாத அஜிதா பாட்டியும் செல்வம் தாத்தாவும் தங்கள் நிலைமாறாமல் அளவளாவி கொண்டு இருந்தனர். சண்டை போட்டு பெற்றோர் வீட்டுக்கு செல்ல துடித்த தோழி வெண்பாவை அவள் கணவனுடன் சேர்த்து வைக்க, "இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லாமல் வாழ்ந்து காட்டும் இந்த காதல் புறாக்களால் மட்டுமே முடியும்" என்று நினைத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்து அதை நிறைவாய் முடித்தும் காட்டிய நித்யா ஒரு பெருமூச்சு விட்டாள் அந்த அன்பு தாத்தா, பாட்டிக்கு மனதினுள் நன்றி கூறியபடியே....................

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.