(Reading time: 4 - 7 minutes)

எனக்கு பிடித்தவை - 16 - கனவு மெய்ப்படும்

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை சமீபத்தில் நம் chillzeeயில் தொடர்கதையாக வந்து நிறைவுப் பெற்ற ஜெய் எழுதி இருக்கும் 'கனவு மெய்ப்படும்' எனும் கதை.

கதை:

ந்த கதை 1980க்களில் நடக்கிறது.

மைலாப்பூரில் வாழும் பெரிய கூட்டுக் குடும்பத்தின் கடைசி செல்லப் பெண்ணாக வளர்கிறாள் மைத்ரேயி. அந்தக் குடும்பம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பம். மைத்ரேயி உடைய அப்பா LICயில் வேலை செய்கிறார், அம்மா டீச்சராக இருக்கிறார்.

ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் மைத்ரேயிக்கு கிரிக்கெட் மேலே தனி ஆர்வம் இருக்கிறது. தன் மாமா மகன் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கப் போகிறாள் மைத்ரேயி. அங்கே அவளுக்கு விளையாடும் வாய்ப்பும் கிடைக்கிறது. நன்றாக பந்து வீசி தன் திறமையை காட்டுகிறாள்.

கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தால் அவளுடைய திறமை இன்னும் மெருகேறும் என விளையாட்டு தெரிந்தவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மைத்ரேயியின் குடும்பத்து பெரியவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். பெரியவளாகி விட்ட மைத்ரேயி அப்படி பொய் விளையாடுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறார்கள்.

மைத்ரேயியின் அப்பா, பாட்டி, மாமா மகன்கள் என சிலர் அவளுக்கு சப்போர்ட் செய்து மற்ற பெரியவர்கள் மனதை மாற்ற வைக்கிறார்கள்.

மைத்ரேயி மகிழ்ச்சியுடன் அகாடமியில் சேர்கிறாள். இருந்தாலும் வெற்றி என்பது உடனே வந்து விடுவது இல்லை என்பதை விளையாட்டுத் துறையில் இருக்கும் பாலிட்டிக்ஸ் மற்றும் அவள் வீட்டில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அவளுக்கு காட்டுகிறது.

அப்படி வரும் தடைகளை தாண்டி மைத்ரேயி கிரிக்கெட்டில் தன் திறமையை வெளிப்படுத்தினாளா என்பது மீதிக் கதை.

ன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் மோட்டிவேஷன், என்கரேஜ்மென்ட் தேவை. காலத்திற்கேற்ற கதை.

1983ல் இந்திய கிரிக்கெட் அணி  உலக கோப்பை வென்றது நம்முடைய நாட்டில் கிரிக்கெட் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது. அதுவும் 1985ல் கிரிக்கெட் லைவ் டெலிகாஸ்ட் ஆரமபித்தது அந்த ஆர்வம் பல மடங்கு வளர உதவியது. இது 70களில், 80களில் பிறந்து வளர்ந்தவர்களின் வாழ்க்கை முறையிலும் வெளிப்பட்டது. ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அந்த ஆர்வம் இருந்தாலும், கிரிக்கெட் எனும் விளையாட்டை தொடரும் வாய்ப்பு அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆண்களுக்கே கிடைத்தது. அவர்களுக்குமே அது பெரிய போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்!

அப்படிப் பட்ட ஒரு காலத்தில் ஒரு ஸ்ட்ரிக்ட்டான குடும்பத்தில் இருந்து ஒரு சிறுமி தன் கனவை நனவாக்கப் போராடி வெல்வதை படிப்பது ஒரு பீல் குட் என்றே சொல்ல வேண்டும்.

ஹீரோயிசம், ஹீரோயினிசம், காதல் என்று எல்லாம்ல ட்ராக் மாறாமல் மைத்ரேயியும், கதையும் ஒரே இலக்கில் செல்வது குட்!

கதையில் இன்னொரு முக்கிய அம்சம், மைத்ரேயிக்கு துணையாக நிற்கும் ரகு, பத்ரி, மற்றும் காமாட்சி பாட்டி.

இது படிக்கும் நம் அனைவருக்குமே ஒரு டேக் அவே பாயின்ட் என்றும் சொல்லலாம். ஒரு குழந்தையின் கனவு நனவாக மாற, பெரியவர்களின் சப்போர்ட் மிகவும் அவசியம். சச்சின் டெண்டுல்கருக்கு கூட அவருடைய அண்ணனின் துணை தேவைப் பட்டது.

நம் பர்சனல் கனவுகளை குழந்தைகள் மேலே புகுத்தாமல் அவர்களின் திறமையை விருப்பத்தை உணர்ந்து அதற்கு நாம் துணையாக நின்று உதவினால் கதையில் வரும் மைத்ரேயி போல இன்னும் பல வெற்றியாளர்களை சந்திக்கலாம்!

ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால், ஒரு நாளில் நிஜமாகும் எனும் மெசேஜை சொல்லும் பீல் குட் கதை ஜெய்யின் கனவு மெய்ப்படும்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:1141}

4 comments

• 😔 you didn't give me a chance...ningale ellathayum cover panitingale nanthini ma'am 👌 I have nothing to add in 😁

Jayanthi ma'am always come up with different story lines with social message and Kannavu maipadum will remain as one of my favourite series forever.... it was really inspiring one and elegantly narrated..series has a valuable message for everyone of us. Worth reading!!

As you rightly quoted oru Kannavu kandal adhai dhinam muyandral,oru nalil nijamagum 👏👏👍

Thank you.
• Superb review! More motivational and direct than even the main story! Nandini madam has a passion, I am sure, to drive home helpful guidance to all members of the family for a better and satisfying life! Hats off!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.